5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On :

ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது.
 இக்கோயில் ஆடித் திருவிழா கடந்த 2 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 3 ஆம் தேதி சுமங்கலி பூஜையும், 4ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
 தொடர்ந்து, திங்கள்கிழமை லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும், செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது. வரும் 11 ஆம் தேதி சாந்த அபிஷேகத்துடன் ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வடக்கு புதுத்தெரு விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.