5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் விஜய்..? திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதல்வரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார்....

When will Vijay get rid of superstition?

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப்படம்)

Updated On :

கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதல்வரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் விஜய்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், "த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!

கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினாரா?

'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் விஜய்?

முதல்வருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத தவெக ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.

தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் மக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்வருக்கு இருக்க வேண்டும்.

கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

When will Vijay get rid of superstition? DMK leader M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.