கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மு.க. ஸ்டாலின் உடன் மாணவர் பாரதிதாசன் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மாணவர் பாரதிதாசன் நேரில் சந்தித்துள்ளார்...

mk stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் மாணவர் பாரதிதாசன் - x

Updated On :

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் இன்று (அக். 15) திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

இதுபற்றி, மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். திராவிட மாடல் அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.

இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.

ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன். பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, மாணவர் பாரதிதாசன் தனக்கு நிகழாண்டில் கிடைக்க வேண்டிய உதவித்தொகை வரவில்லை எனவும், இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கண்ணீர் மல்க வெளியிட்ட விடியோ பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

திமுக ஆட்சியின்போது மலேசியா சென்ற பாரதிதாசனுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இடதுசாரித் தலைவர்கள் பெ. சண்முகம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையடுத்து, பாரதிதாசனுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Bharathidasan, a student from Tamil Nadu currently pursuing research studies in Malaysia, met and spoke with former CM of TN M.K. Stalin in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.