தாராபுரம் தொகுதியில் மு.க. ஸ்டாலின் சாலைவலம்! வழிநெடுகிலும் வரவேற்பு!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் சாலைவலம்.

தாராபுரம் தொகுதியில் மு.க. ஸ்டாலின் சாலைவலம். - படம்: விடியோ கிளிப்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் இன்று(அக். 2) பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரியகடை வீதி வழியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டு, வாக்குசேகரித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, உடுமலை சாலையில் தனியார் விடுதி அரு கேஇன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசவுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்த அவருக்கு திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
Summary
DMK leader M.K. Stalin is undertaking a roadshow in the Dharapuram constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





