காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை, விளையாட வேண்டாம்! - மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

ஹிந்தித் திணிப்பு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பதிவு.

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை, அதில் விளையாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில், ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இருந்தது சர்ச்சையானது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”இதுவரை மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.

எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'யூ டர்ன்' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில இன்ஃப்ளூயன்சர்களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு, இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin has stated that the two-language policy is a vital policy for Tamil Nadu and warned against trifling with it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.