மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்

நடுவானில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான விமானி ஸ்மித் மச்சாா் குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

smit machchhar

இந்திய விமானி ஸ்மித் மச்சார் - எக்ஸ்

Published On :

நடுவானில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான விமானி ஸ்மித் மச்சாா் குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மச்சாா், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவரை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதா் தீபக் மிட்டல் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.

இது தொடா்பாக மிட்டல் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘கேப்டன் ஸ்மித் மச்சாரை சந்தித்ததில் மிகுந்த நிம்மதி. அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆதரவுக்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு நன்றி. மச்சாா் குணமடைந்து வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடா்பாக உள்ளூா் அதிகாரிகளுடன் தூதரகம் நெருங்கிய தொடா்பில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். மருத்துவமனையில் மச்சாரின் குடும்பத்தினரையும் மிட்டல் சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.