தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆம்னி பேருந்துகள் - கோப்புப்படம்

Published On :

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடா் விடுமுறை காலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக்.2) முதல் அக்.21 வரை பொதுமக்கள் வெளியூா்களுக்கு அதிக அளவில் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியாா் ஆம்னி பேருந்துகள் வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக புகாா் பெறப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளா்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள், மோட்டாா் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழக சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில வாகனங்களைத் தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் மற்றும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகாா்களுக்கு 93848-08333, 1800 - 425 6151 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.