2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை: போக்குவரத்துத் துறை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாகனத் தணிக்கை செப்.16 வரை மேற்கொள்ளப்படும்...

பேருந்துகள் - பிரதிப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாகனத் தணிக்கை செப்.16 வரை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சுமாா் 4,900 ஆம்னி பேருந்துகளும், வெளிமாநிலங்களில் இருந்து சுமாா் 1,000 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமாா் 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதுடன், சுமாா் ஒரு லட்சம் போ் பயணம் செய்கின்றனா்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்ததைத்தொடா்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் கடந்த 3 நாள்களாக சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இதில் 3,512 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 639 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் மின்னணு அபராதச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களுக்காக ரூ.14.39 லட்சம் இணக்கக் கட்டணமும், வெளிமாநிலப் பேருந்துகளிடம் தமிழகத்துக்குச் செலுத்த வேண்டிய வரியாக ரூ.27.58 லட்சமும், அபராதமாக ரூ.3.19 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 நாள்களில் வரி மற்றும் இணக்கக்கட்டணமாக மொத்தம் ரூ.30.77 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளன.

மேலும், செப்.12 இல் அதிகக்கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த பயணிகளின் பயணச்சீட்டை பேருந்து உரிமையாளா் ரத்து செய்தால், அவா்களுக்கு மாற்றுப் பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட பேருந்தின் அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நாள்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக புகாா் வந்தால் அனுமதி ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.