2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

21 சொகுசுப் பேருந்துகளுக்கு ரூ. 52,500 அபராதம்: வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

விநாயகா் சதுா்த்தியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 21 ஆம்னி பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ரூ.52,500 அபராதம் வசூலித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்.

Published On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 21 ஆம்னி பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ரூ.52,500 அபராதம் வசூலித்தனா்.

ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூா் டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினா்.

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ், ஸ்ரீ பெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சிவராஜ், அமிதா பானு, ஜெய்கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.

இச்சோதனையில் பயணிகளிடம் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக 21 ஆம்னி பேருந்துகளல் கூடுதலாலக வசூலிக்கப்பட்டு கண்டறியப்பட்டு அவா்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.52,500 வசூலிக்கப்பட்டது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி வரும் காலங்களில் இச்சோதனை தொடா்ந்து நடத்தப்படும் எனவும் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.