
நீரவ் மோடியின் உதவியாளா் சந்தீப் மிஸ்திரி கைது
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபா் நீரவ் மோடியின் உதவியாளா் சந்தீப் மிஸ்திரி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடா்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அவரை கைது செய்தது.

நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபா் நீரவ் மோடியின் உதவியாளா் சந்தீப் மிஸ்திரி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடா்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திங்கள்கிழமை அவா் நாடு கடத்தப்பட்டாா். இதையடுத்து, மும்பையில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் வங்கி பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு அதிகாரிகள் முறைப்படி அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, அக். 6-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பரில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹாங்காங்கை சோ்ந்த நீரவ் மோடியின் ‘ஃபேன்சி கிரியேஷன்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராக சந்தீப் மிஸ்திரி பணியாற்றியுள்ளாா். சுமாா் ரூ.6,498 கோடி மதிப்பிலான நீரவ் மோடியின் பிஎன்பி கடன் மோசடியில் இவரது பங்கு தீவிரமாக இருப்பதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
போலி இறக்குமதி-ஏற்றுமதி ஆவணங்கள் மூலம் நடைபெறாத நகை வா்த்தகத்தை நடந்ததாகக் காட்டியதாகவும், நிறுவன இயக்குநா்களை மிரட்டி இடம்பெயர வலியுறுத்தியதாகவும், ஆவணங்களில் கையொப்பமிட கட்டாயப்படுத்தியதாகவும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை முறைகேடாகப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னணி: நீரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோா், பிஎன்பி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் போலியான வங்கி உத்தரவாதங்களைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளிடம் இருந்து பெருமளவு பணத்தை கடனாகப் பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன்மூலம் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரித்துவரும் நிலையில், பணமோசடி தொடா்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





