காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! பயங்கரவாதத் தாக்குதலா? அமீரக அரசு விசாரணை!

துபை விமானத்தில் விமானி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலா என ஐக்கிய அரபு அமீரகம் விசாரணை...

FlyDubai stabbing incident

ஃபிளை துபை விமானம்... - கோப்புப் படம் | AP

Published On :

இஸ்ரேல் சென்ற துபை விமானத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு நேற்று (செப். 30) 174 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்தித் தாக்கினார்.

அவரை எதிர்த்து இந்திய விமானி சண்டையிட்டு விமானி அறையின் கதவைத் திறந்ததால், வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர்.

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலுக்குள்ளான இந்திய விமானிக்கு சௌதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முயற்சி என இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளோ அல்லது திட்டங்களோ இருக்கிறதா என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு அமீரக அரசு இன்று (அக். 01) அறிவித்துள்ளது.

முன்னதாக, தாக்குதலை எதிர்த்து சண்டையிட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஹீரோ எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

UAE government is investigating whether the stabbing incident on a Dubai-bound flight to Israel was a terrorist attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.