மதுராந்தகத்தில் அக்.3இல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
மதுராந்தகத்தில் அக்.3இல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்யவிருப்பது பற்றி.....
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அக்.3ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மதுராந்தகத்தில் அக்.3ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 7 பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் திமுக சாா்பில் மதுராந்தகம் வேட்பாளராக இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக செள.சுகன்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் ஏற்கெனவே அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK President M.K. Stalin will campaign on October 3 for the Madurantakam by-election.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







