
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் செவ்வாய்க்கிழமை பாலியல் தொந்தரவு செய்ததாக 13 வயதுச் சிறுவன்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் செவ்வாய்க்கிழமை பாலியல் தொந்தரவு செய்ததாக 13 வயதுச் சிறுவன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தில் தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயதுச் சிறுமியிடம் அதே கன்னிராஜபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயதுச் சிறுவன், அச்சிறுமியின் வீட்டில் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர் ஒருவர் அளித்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி எஸ்.துரைமுருகன் நேரில் விசாரணை நடத்தி கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் யமுனா சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து அச்சிறுவனை சிறுவர்கள் நலக் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




