விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தனுஷ்கோடி அருகே சாலை விபத்து: கேரள பக்தர்கள் உள்பட 12 பேர் காயம்

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கேரள பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனம்

Updated On :25 டிசம்பர் 2018, 6:21 am IST

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கேரள பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் திங்கள்கிழமை பலத்த காயம் அடைந்தனர்.
ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு இடங்களை சுற்றிபார்க்க வாடகை வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடிக்கு வாடகை வேனில் சென்றனர். பாறையடி என்ற இடத்தில்  தனுஷ்கோடியில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 
இதில் கேரளாவில் இருந்து வந்த வைஸ்னா(20)ஆருசி (8), சசிமா (38), விபினா(29), சுதீஸ் (47), வினோத்(47), விஜய் (40), ஓட்டுநர் நம்புவிக்னேஷ் (20) மற்றும் மீனவர்களை ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த மீனவர்கள் ராமேஸ்வரி (35), சத்யா(22), 
வர்சினி(10), செளசல்யா(20) ஆகிய 12 பேர் பலத்த காயமடைந்தனர். 
காயமடைந்த அனைவரும்  ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் வாகனத்தில் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
இதில் கேரளா பக்தர்களான விஜய் மற்றும் வைஸ்னா ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தனுஷ்கோடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை 
மேற்கொண்டு வருகின்றனர். முறையாக பயிற்சி இல்லாத ஓட்டுநர்  சுற்றுலா பயணிகள் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.