பெங்களூர், ஜூன் 24 - தமிழ்நாடு கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று பெங்களூரில் மத்திய நிதி மந்திரி சி. சுப்பிரமணியத்தை சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள வறட்சி நிலைமை அப்போது பிரதானமாக விவாதிக்கப்பட்டது.
இன்று காலை பெங்களூர் வந்த சுகாதியா மந்திரி சுப்பிரமணியத்துடன் சாதாரண முறையில் பேச்சு நடத்தினார். பின்னர் மாலையில் அவர் சென்னைக்குப் பயணமானார்.
நிதி உதவிக் கோரிக்கை
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள வறட்சி நிலைமை கவலை தருவதாக உள்ளதாகவும் இது பற்றி நிதி மந்திரி சுப்பிரமணியத்துடன் பிரதானமாக விவாதித்ததாகவும் சென்னைக்குப் புறப்படும் முன்னர் சுகாதியா நிருபரிடம் கூறினார். தேவைப்படும்போது மேலும் உதவி அளிக்க வேண்டுமென மத்திய நிதி மந்திரியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கவர்னர் சுகாதியா தெரிவித்தார்.
நிதி மந்திரி சுப்பிரமணியம் இது பற்றி அனுதாபக் கருத்துக் கொண்டு முடிந்த உதவி அனைத்தும் செய்வதாக உறுதி அளித்தார் என்றார் தமிழ்நாடு கவர்னர்.
தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை பற்றியும் அவரிடம் கவர்னர் எடுத்துரைத்தார். ...
45 அடி ஆழ கிணற்றில் நெய்வேலி ஊழியர் சடலம் - எடுக்க இறங்கியவரும் பலி
நெய்வேலி, ஜூன். 24 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்ப்பரேஷனைச் சேர்ந்த உரத் தொழிற்சாலையில் சீனியர் உதவியாளராக வேலை பார்த்து வந்த எஸ். ராமஸ்வாமி (வயது 32) என்பவரின் சடலம், ஒரு கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள விளாங்குளம் கிணற்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 45 அடி ஆழத்திலுள்ள இந்தக் கிணற்றில் அந்தச் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்ததாம்.
சடலத்தை எடுக்க அந்த ஆழமான கிணற்றில் இறங்கிய உரத் தொழிற்சாலையின் ஆப்பரேடிங் கிளீனர் சிவகடாட்சம் என்பார் மீது ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்து அவரும் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.
பிறகு இரண்டு சடலங்களையும் பாண்டுரங்கம் என்பவர் மேலே எடுத்துக் கொண்டு வந்தார். போலீஸ் அவருக்கு ரூ. 25 சன்மானம் அளித்தது.
ராமஸ்வாமி அய்யங்காரை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காணவில்லையாம். அவருடைய சைக்கிள் கிணற்றுக்குப் பக்கத்தில் கிடந்தது.
Summary
Neyveli employee's body found in 45-foot-deep well; rescuer who went down to retrieve it also dies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு!

17.6.1976: "மிஸா" ஷரத்து 24 மாத காலம் நீடிப்பு - காவலில் வைக்க காரணம் கூற வேண்டியதில்லை

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!

8.6.1976: சுகாதியா த.நா. கவர்னராக நியமனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




