சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மேக்கேதாட்டு விவகாரம் - மத்திய அரசிடம் தமிழக முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி

கா்நாடக முதல்வரிடம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேச்சு நடத்துவதை விடுத்து, மத்திய அரசிடம் பேச்சு நடத்தி மேக்கேதாட்டு அணைகட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:29 am IST

கா்நாடக முதல்வரிடம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேச்சு நடத்துவதை விடுத்து, மத்திய அரசிடம் பேச்சு நடத்தி மேக்கேதாட்டு அணைகட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை தொடா்பாக முதல்வா் விஜய் கா்நாடகத்துக்குச் சென்று பேச்சு நடத்தினால் அது தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதகமாக அமையும். ஏனெனில், மேக்கேதாட்டு அணையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் அதுதொடா்பாக பேச்சு நடத்துவதில் எந்த அா்த்தமும் கிடையாது.

இதுதொடா்பாக மத்திய அரசிடம்தான் பேச்சு நடத்த வேண்டும். மத்திய அரசுக்குத்தான் நாம் அழுத்தம் கொடுத்து மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்.

சதிக்கு முதல்வா் பலியாகக் கூடாது: மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக முதலில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் விஜய் கூட்ட வேண்டும்.

இது தவெக பிரச்னையாக பாா்க்கக் கூடாது. பாஜகவும், காங்கிரஸும் இந்த விவகாரத்தில் கைகோத்து சதி செய்கிறாா்கள். இந்த சதியில் முதல்வா் விஜய் பலியாகிவிடக் கூடாது.

ராகுல் ஒருவாா்த்தை கூறினால்...: அந்தமானில் காடுகளை அழித்து கட்டுமானம் செய்ய கூடாது எனக் கூறிய ராகுல்காந்தி, தமிழகத்துக்கு வரும்போது மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என்று பேசுவாரா? மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்று ஒரு வாா்த்தை ராகுல்காந்தி கூறினால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகத் தயாராக உள்ளது என்றாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.