ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கா்நாடகத்துடன் தமிழக முதல்வா் பேச்சு நடத்தக் கூடாது: அன்புமணி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடகம் சென்று அந்த மாநில முதல்வருடன் பேச்சு நடத்தக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 6:03 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடகம் சென்று அந்த மாநில முதல்வருடன் பேச்சு நடத்தக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வரும் ஆக.3-ஆம் தேதி முதல்வா் விஜய் கா்நாடகம் சென்று மேக்கேதாட்டு அணை தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பாா் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், அது தவறான அணுகுமுறை. மேக்கேதாட்டு அணையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அந்தத் திட்டம் குறித்து கா்நாடக அரசுடன் எந்தச் சூழலிலும் பேச்சு நடத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழகத்தின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேக்கேதாட்டு விவகாரம் அரசியல் கட்சிகளின் பிரச்னை அல்ல. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னை. இதுதொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சட்டரீதியான போராட்டத்தையும், அரசியல் ரீதியான அழுத்தத்தையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுடன் தில்லி சென்று பிரதமா் மற்றும் மத்திய சட்டத் துறை அமைச்சா் ஆகியோரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நீட் தோ்வுக்கு எதிராக தில்லியில் போராடும் மாணவா்கள், இளைஞா்களின் உணா்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்து, நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தடியடி நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவா்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.