ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தனுஷ்கோடியில் சிலிண்டர் வெடித்ததில்  உணவகம் எரிந்து சேதம் : பெண் காயம்

தனுஷ்கோடியில் குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை

Updated On :9 ஜூலை 2018, 1:19 am

தனுஷ்கோடியில் குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கடலில் பிடித்து வரும் மீன்களை உடனே சமைத்து வழங்க ஓலைக் குடிசைகளில் ஏராளமான சிறிய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், முகுந்தராயர்சத்திரம் பகுதியில் அதிசயம் என்ற பெண்ணுக்குச் சொந்தமான உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவு சமைக்கும் பணியில் அவரது தாயார் மேரி, அதிசயத்தின் மகள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு வரும் குழாயில் திடீரென தீ ப்பிடித்துள்ளது. இதனை கண்ட அதிசயம், அவரது தாய் மேரி ஆகியோர் மகளை இழுத்துக் கொண்டு உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளனர். சற்று நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கடை தீப் பிடித்து, அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் தீக்காயம் அடைந்த அதிசயம் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெண்கள் விரைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 
இச்சம்பவம் குறித்து தனுஷ்கோடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.