வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முதுகுளத்தூரில் யாதவர் சங்க முப்பெரும் விழா

முதுகுளத்தூர் வட்டார யாதவர் சங்க வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி கோபாலகிருஷ்ண யாதவ் மணிமண்டபம் திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா, 101 ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில்

Updated On :14 மே 2018, 6:26 pm

முதுகுளத்தூர் வட்டார யாதவர் சங்க வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி கோபாலகிருஷ்ண யாதவ் மணிமண்டபம் திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா, 101 ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி கோபாலகிருஷ்ண யாதவின் முழு உருவ வெண்கலசிலையை தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட யாதவ மகாசபை தலைவர் வேலு மனோகரன் தலைமை வகித்தார்.
வட்டார யாதவ சங்க தலைவர் தேவேந்திரன், செயலாளர் முத்துச்சாமி, பொருளாளர் பாலுச்சாமி, சோனை மீனாள் கல்லூரியின் நிறுவனர் சோ.ப.ரெங்கநாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர், தியாகி கோபாலகிருஷ்ணன் யாதவின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டனர்.
இவ்விழாவில் பொறியாளர் காசி, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், வட்டார யாதவ சங்க செயலாளர் வாகைக்குளம் அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.