மிகவும் கஷ்டப்படுவதால், எங்கள் குழந்தைகள் 7 பேருக்கும் எழுதிக் கொடுத்த ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வயதான தம்பதி மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த அமீர் முகைதீன் (70) மற்றும் இவரது மனைவி சீனி செய்யது (60) வந்திருந்தனர். அமீர் மைதீனால் நடக்க இயலாது என்பதால், அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவி சீனி செய்யது அழைத்து வந்திருந்தார்.
இவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு ராமநாதபுரத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருந்தது. அதை, எங்களது 6 மகன்கள், ஒரு மகள் என 7 பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். இந்நிலையில், எங்களை ஒரேயொரு மகன் மட்டும் ஓரளவுக்கு பார்த்துக் கொள்கிறார்.
மற்ற 6 பேரும் வயதான எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. மருத்துவ சிகிச்சை கூட பெறமுடியாத அளவுக்கு கஷ்டப்படுகிறோம். மகன்களில் ஒருவர், எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். சில சமயங்களில் தாக்குதலும் நடத்துகிறார்.
எனவே, மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்பதாலும், வசதியற்ற நிலையில் உள்ளதாலும், நாங்கள் 7 பேருக்கும் பிரித்துக் கொடுத்த சொத்தை எங்களுக்கு திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
இம் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலரையும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரையும் அத்தம்பதியர் வீட்டுக்கு சென்று விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

