முதுகுளத்தூரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மைய நூலகம் இன்று வரை தனியார் கட்டடத்தில் ரூ.4 ஆயிரம் வாடகையில் இயங்கி வருகிறது. இந்நூலகம் ஊருக்கு வெளியில் இருப்பதால் வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் நூலகத்திற்கு செல்ல வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். சமீப காலமாக தமிழக அரசு கல்வியாளர்களுக்கு போட்டி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இப்பகுதியில் படித்த மாணவர்கள் வெளி நகரங்களுக்கு சென்று தனியார் கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து போட்டித் தேர்வுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால், நூலகத்திற்கு சென்று தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கின்றனர்.இந்நிலையில் நூலகம் வெகு தொலைவில் இருப்பதால் குறிப்பாக பெண்கள் நூலகத்திற்கு செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். நூலகத்தில் போட்டித்தேர்வுக்கான அனைத்து புத்தகங்களும் இருந்தாலும் வாசகர்கள் குறைவாக வருவதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை பேருந்து நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்குவதற்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் மற்றும் நூலக அலுவலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

இங்கிலாந்து ரசிகர்கள் எனது பெயரை முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
