ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜனவரி 24 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) புதுப்பித்துக் கொள்ள கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க கடந்த 2018 அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 24 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், தற்போது வரை தங்களது பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் வியாழக்கிழமை (ஜன.24) மாலைக்குள் புதுப்பிக்கலாம். இதில் தவறும்பட்சத்தில், மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1.25 லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாகவும், அவர்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! முதல்வர் விஜய்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


