பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு நாளை கடைசி வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜனவரி 24 ஆம்

Updated On :23 ஜனவரி 2019, 8:05 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜனவரி 24 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) புதுப்பித்துக் கொள்ள கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க கடந்த 2018 அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 24 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 
     மேலும், தற்போது வரை தங்களது பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் வியாழக்கிழமை (ஜன.24) மாலைக்குள் புதுப்பிக்கலாம். இதில் தவறும்பட்சத்தில், மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால், இந்த வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் தெரிவித்தனர். 
     ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1.25 லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாகவும், அவர்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.