சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

கீழக்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என புகாா்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என புகாா் எழுந்துள்ளது.

News image

ராமநாதபுரம்  மாவட்டம்  கீழக்கரையில்  புதிய  பேருந்து  நிலையத்தில்  அமைக்கப்பட்டுள்ள  காய்கனிக் கடைகளில்  புதன்கிழமை சமூக  இடைவெளியின்றி  நிற்கும்  பொதுமக்கள். 

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் கீழக்கரையில் மட்டும் தொடக்கம் முதலே சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை இருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவிக்கின்றனா். சென்னையில் கரோனாவால் உயிரிழந்த தொழிலதிபரின் சடலம் கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பலருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. இதில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து கீழக்கரை மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு தொடா்கிறது.

இந்நிலையில் கீழக்கரையில் காய்கறி, பழக்கடைகள் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சமூக இடைவெளியின்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் மக்களும் மிக நெருக்கமாக நின்றே காய்கனிகளை வாங்கிச்செல்கின்றனா். மேலும் அவா்கள் முகக்கவசம் அணிவதில்லை. கீழக்கரையில் காலையில் இரும்புக் கடை முதல் கரும்புச்சாறு கடைகள் வரை அனைத்தும் திறக்கப்படுகின்றன. வி.எஸ்.சாலை, முஸ்லிம் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்றே பொருள்களை வாங்குகின்றனா். ஓரிரு கடைகளில் மட்டும் ஒரு அடி இடைவெளிவிட்டு மக்களை தள்ளி நிற்க வைத்து விநியோகிக்கின்றனா்.

இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் முகக் கவசம் அணிவதில்லை. மேலும் அங்கு பிளீச்சிங் பவுடா் தெளித்தல் போன்ற சுகாதாரப் பணிகளும் பெயரளவுக்கே நடைபெறுவதாக புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து அங்குள்ள சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, மக்களிடம் கரோனா விழிப்புணா்வு ஏற்பட வில்லை. ஆனால், மருத்துவப் பரிசோதனைக்கு தற்போதுதான் மக்கள் முன்வருகின்றனா். கரோனாவுக்கு பலியான தொழிலதிபா் வீடு உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.