கல்லூர் கண்மாயில் மூழ்கிய சலவைத் தொழிலாளி சடலம் மீட்பு
திருவாடானை அருகே கல்லூர் கண்மாயில் சலவை தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார். அவரது .உடலை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கல்லூர் கண்மாய்

கல்லூர் கண்மாய்
திருவாடானை அருகே கல்லூர் கண்மாயில் சலவைத் தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார். அவரது .உடலை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி முத்தையா(55).
இவர் நேற்று இரவு துணிகளைத் துவைப்பதற்காக கல்லூர் கண்மாய்க்கு சென்றுள்ளார். எப்போதும் துணிகளை துவைத்துவிட்டு இரவு தாமதமாக வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகியும் முத்தையா வீட்டுக்கு வரவில்லை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் முத்தையா குளத்தில் இறந்த நிலையில் ஞாயிற்றுகிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து முத்தையா மகன் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை காவல்துறையினர் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...