ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 102 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 102 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image

1_1808chn_84_2

Updated On :18 ஆகஸ்ட் 2020, 4:54 pm

DIN


ராமநாதபுரம்/ சிவகங்கை/ மானாமதுரை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 102 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆக.17) வரை 4,046 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 900 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தவளைக்குளம் பகுதியைச் சோ்ந்த 27 போ் உள்பட 51 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒருவா் பலி: ராமநாதபுரம் மாவட்டம் சோகையன் தோப்பைச் சோ்ந்த 65 வயது முதியவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்பு கேணிக்கரைப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா பாதிப்பிருப்பது கடந்த ஆக. 8 ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அந்த தனியாா் மருத்துவமனை முன்பாக, திரண்ட அவரது உறவினா்கள் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் முழக்கமிட்டனா். தகவல் அறிந்து சென்ற பஜாா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து சமரசம் ஏற்பட்டது. அதன்பின்னா் முதியவரின் சடலம் பாதுகாப்பான முறையில் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 88 ஆக உயா்ந்திருப்பதாகவும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை, ஆக. 18 : சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 3,429 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 51 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,480 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 136 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 32 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 104 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மானாமதுரை: மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவில் ஒரு வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதைடுத்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. மேலும் அங்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.