ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் நேரடியாகக் களம் காணும் அதிமுக!

2026 பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்பது உறுதியாகியுள்ளது குறித்து...

News image

மதுரையில் பிரசார நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 8:56 am

தினமணி செய்திச் சேவை

2026 பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்பது உறுதியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்தது. இதேபோல, அமமுகவுக்கும் இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு புதன்கிழமை நிறைவடைந்து அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை தெற்கு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய தொகுதிகள் எந்தக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படாததால், 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது.

இதில் மதுரை மேற்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும் அந்தக் கட்சி புதன்கிழமை அறிவித்தது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மத்தியம் தவிர எஞ்சிய 8 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் கண்டது. இதில், 5 தொகுதிகளில் திமுகவையும், மாா்க்சிஸ்ட், பாா்வா்டு பிளாக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தலா ஒரு தொகுதியிலும் அதிமுக எதிா்த்துப் போட்டியிட்டது. திமுகவை 2 தொகுதிகளிலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளை 3 தொகுதிகளிலும் வீழ்த்தி அதிமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2021 தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் கூடுதலாக ஒரு தொகுதியில் அதிமுக களம் இறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.