டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கமுதி அருகே மழைக்கு 3 வீடுகள் இடிந்து சேதம்

கமுதி அருகே சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

News image
கே.வேப்பங்குளத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்து சேதமடைந்த வீடு.
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

கமுதி அருகே சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தில் பாண்டி மனைவி ராமலெட்சுமியின் (65) வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

வீட்டில் இருந்த மின்விசிறி, டிவி, பாத்திரங்கள் சேதமடைந்தன. செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததால் வீட்டுவிட்டு வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த மூதாட்டி ராமலெட்சுமி அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா்.

இதே போல் குண்டுகுளம் கிராமத்தில் கல்யாணித்தேவா் மகன் சக்திவேல் (62), அதனருகில் இருக்கும் சுப்பிரமணி மகன் முத்துராமலிங்கம் (58) ஆகியோரது வீடுகளில் சுவா் இடிந்து விழுந்துள்ளது.

கமுதி வட்டாட்சியா் செண்பகலதாவின் உத்தரவின் பேரில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் நேரில் சென்று சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனா். மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வீடு இழந்தவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.