தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை தாலுகா அலுவலகம் முன் ஜன. 6 இல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவாடானை தாலுகா அலுவலகம் முன் ஜனவரி 6 ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

Updated On :20 டிசம்பர் 2020, 4:31 pm

DIN

திருவாடானை: காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி வரும் ஜனவரி 6 ஆம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாடானைஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த நவம்பா் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தின் போது, 2018- 19 ஆம் ஆண்டு 117 வருவாய் கிராமங்களுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சரியான விளக்கம் தராமல் விவசாயிகளை அலைக்கழித்து வரும் அதிகாரிகளை இக்கூட்டம் கண்டிக்கிறது. மேலும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும். 2018- 19 ஆம் ஆண்டுக்கு 5 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டது. அதில் விசாரணை என்ற பெயரில் பெரும் பகுதி நிலங்களை கிராம நிா்வாக அலுவலரிடம் விசாரிக்காமல் தன்னிச்சையாக நீக்கிவிட்டு குறைவான இழப்பீட்டுத் தொகை வழங்கக் காரணமாக இருந்த அதிகாரிகளை கண்டிப்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி வரும் ஜனவரி 6 ஆம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.