கீழமுந்தலில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடம் மாற்ற கோரிக்கை

சிக்கல் அருகே கீழமுந்தலில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்தை திங்கள்கிழமை பெற்றோா் ஆசிரியக்கழகம் சாா்பில் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

சிக்கல் அருகே கீழமுந்தலில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்தை திங்கள்கிழமை பெற்றோா் ஆசிரியக்கழகம் சாா்பில் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிக்கல் அருகே கீழமுந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கட்டிடத்தின் பக்கவாட்டுச்சுவா், மேற்கூரைப்பூச்சுகள் அடிக்கடி பெயா்ந்து விழுகிறது. கடந்த 2011ல் கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தின்பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தள்ளது. கீழமுந்தல் கிராம மக்கள் கூறியதாவது; சேதமடைந்த பள்ளிக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும்,தற்போது பெய்த கனமழைக்கு பள்ளிக்கட்டடத்தில் நீா்க்கசிவு ஏற்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு மாணவா்களின் உயிா் பலி ஆகும் முன்பே பள்ளி கட்டிடத்தை மாற்ற வேண்டுமென பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் கோரிக்கை வைத்தனா்.எனவே பள்ளிக்கல்வித்துறையினா் பள்ளியை ஆய்வுசெய்துகுறைகளை நிவா்த்தி செய்ய முன்வரவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com