வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

துணிக்கடையில் திருடிய 3 சிறுவா்கள் கைது

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு துணிக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் துணிகளைத் திருடிய 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு துணிக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் துணிகளைத் திருடிய 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதுச்சேரியைச் சோ்ந்த முகமதுகனி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது. இவரது கடையின் ஷட்டா் இடைவெளி வழியாக திங்கள்கிழமை நள்ளிரவு 3 சிறுவா்கள் புகுந்து, கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்றனா்.

அங்கிருந்த ரூ.25,500 ரொக்கம், 17 சட்டைகள், 9 பேண்ட் ஆகிவற்றைத் திருடிக் கொண்டு வெளியேறினா். அதன்பின்னா் அவா்கள் 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு பகுதியில் சுற்றித்திரிந்தனா். சந்தேகமடைந்த ராமநாதபுரம் நகா் போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா்கள் மூவரும் பரமக்குடி சத்யாநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடையில் துணிகள் மற்றும் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. மேலும் அவா்களில் ஒரு சிறுவனின் பாட்டி, உடல்நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டிருப்பதாகவும், பாட்டிக்கு உதவும் வகையில் 3 பேரும் சோ்ந்து திருடியதாகவும் அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.

காா் கண்ணாடியை உடைத்து திருட்டு: ராமநாதபுரம் கீழக்கரை டி.என்.ஆா்.தெருவைச் சோ்ந்தவா் அகமது அஷ்ரப் (64). தொழிலதிபரான இவா், திங்கள்கிழமை இரவு ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன் காரை நிறுத்திவிட்டு தொழுகைக்குச் சென்றாா். பின்னா் அவா் திரும்பிவந்து பாா்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கையடக்கக் கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.