ராமநாதபுரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலையிலும் பிராா்த்தனைகள் நடைபெறவுள்ளன.

ராமநாதபுரத்தில் சாலைத் தெருவில் உள்ள புனிதஜெபமாலை அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. ஆலய பங்குத்தந்தை மற்றும் வட்டார அதிபா் அருளானந்து தலைமை வகித்தாா். நகரில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பிராா்த்தனையில் கலந்துகொண்டனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெறும் என ஆலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் வடக்குத் தெரு தேவாலயம், இளங்கோவடிகள் தெருவில் உள்ள பெந்தகொஸ்தே சபை ஆகியவற்றிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன. மாவட்டத்தில் ஓரியூா் புனித அருளானந்தா் ஆலயம் மற்றும் தொண்டி, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, திருவரங்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com