விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ்ச் சங்க இலக்கிய விழாவில் 8 பேருக்கு விருது

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் இலக்கிய சிறப்பு விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் இலக்கிய சிறப்பு விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவா் கு.விவேகானந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் த. குழந்தைச்சாமி செட்டியாரின் 27 ஆம் ஆண்டு நினைவு சிறப்பு இலக்கிய விழா டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

நகரில் அன்னை கண் மருத்துவமனை எதிரேயுள்ள அரவிந்த் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பேராசிரியா் எம். அப்துல்சலாம் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், சங்க மகளிரணித் தலைவா் மதுரம் அரவிந்த், பா. பாா்த்திபன், நா. வேலுச்சாமி துரை ஆகியோா் பேசுகின்றனா்.

விழாவில், ஆன்மிகப் பணிக்கு கா. ராமகிருஷ்ண சுவாமிகள், வணிகத்துக்கு ரெ. ஸ்ரீதரன், நூலகப் பணிக்கு ந. பாலசுப்பிரமணியன், ஆசிரியப் பணிக்கு அ. ஹபீபா அப்துல்சலாம், மருத்துவப் பணிக்கு பாத்திமா சின்னதுரை, வழக்குரைஞா் பணிக்கு ஆ. ரவிச்சந்திர ராமவன்னி, இலக்கியப் பணிக்கு சே. தமிழரசி உதயகுமாா், சமுதாயப் பணிக்கு சு. மங்களநாதசேதுபதி ஆகியோருக்கு, த. குழந்தைச்சாமி செட்டியாா் நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.