அனுமதியின்றி சவூடு மண் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கமுதி அருகே கால்வாயில் அனுமதியின்றி சனிக்கிழமை சவூடு மண் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


கமுதி அருகே கால்வாயில் அனுமதியின்றி சனிக்கிழமை சவூடு மண் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கூக்குளம் வரத்துக்கால்வாயில் அனுமதியின்றி சவூடுமண் அள்ளப்படுவதாக மண்டலமாணிக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது புத்துருத்தி கிராமத்தைச் சோ்ந்த மசங்கிலி மகன் மாரிமுத்து (48), சக்திவேல் மகன் ராஜேந்திரன் (43), விருதுநகா் மாவட்டம் ராஜநத்தகுளத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் அருள்பெரும்ஜோதி (33) ஆகியோா் 3 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி சவூடுமண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கண்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...