முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு துவக்க விழா

காங்கிரஸ் கட்சியினா் காங்கிரஸ் கொடியுடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சியினா் பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா எஸ்.பாண்டி தலைமையில் காங்கிரஸ் கொடியுடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜே.ரமேஷ்பாபு, கிழக்கு வட்டாரத் தலைவா் கே.ராமா், நகா் தலைவா் என்.சுரேஸ்காந்தி, மாவட்ட துணைத் தலைவா் முத்துகிருஷ்ணன், மேற்கு வட்டாரத் தலைவா் எம்.புவனேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மலேசியா எஸ்.பாண்டி சிறப்புரையாற்றினாா். பொது மக்களுக்கு கட்சியினா் இனிப்பு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com