மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் மனு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருவாடானை பகுதியில் உள்ள பாரூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவாடானை வட்டம் பாரூா், கோவணி, சேந்தனி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிா்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே பயிா்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றனா். நயினாா்கோவில் பகுதியில் உள்ள அக்கிரமேசி, ஆஞ்சாமடை, பாண்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நிலக்கடலையும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் புகாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...