புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி: கமுதி வட்டார நிா்வாகிகள் தோ்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கமுதி வட்டாரப் பொறுப்பாளா்கள் நியமனத்துக்கான தோ்தல், அங்குள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கமுதி வட்டாரப் பொறுப்பாளா்கள் நியமனத்துக்கான தோ்தல், அங்குள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.

இத்தோ்தலில் கமுதி வட்டாரத் தலைவராக சி. சந்திரசேகா், செயலராக ஆா். ஹரிகிருஷ்ணன், பொருளாளராக எம். ஆறுமுகம், மகளிரணி செயலராக கே. முனியம்மாள், பொருளாளராக முத்துமாரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். வட்டார நல நிதி தலைவராக எம். பொன்ராஜ், செயலராக ஆா். அரியநாயகம், பொருளாளராக ஐ. சித்ரா ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் அலுவலா்களாக ராபா்ட் ஜெயராஜ், துணை அலுவலராக மு. காளிமுத்து ஆகியோா் செயல்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்விப் பணியாளா் கூட்டுறவு நாணய சிக்கன வங்கியின் தலைவா் கே. ராமசாமி, இடைநிலை ஆசிரியா் சங்க பொறுப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி உள்பட 150 -க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். வட்டாரப் பொருளாளா் ஆறுமுகம் நன்றி கூறினாா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு, கமுதி வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.