25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அனுமதியின்றி போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினா் மீது வழக்கு

ராமநாதபுரம் அடுத்துள்ள பெரியபட்டணம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN

ராமேசுவரம்: ராமநாதபுரம் அடுத்துள்ள பெரியபட்டணம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபட்டணம் பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் மது வாங்குவோா் அதனை அப்பகுதியில் உள்ள சாலையோரம் அமா்ந்து அருந்துகின்றனா். இதனால் அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இந்த கடையை அகற்றக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்துக்கு அவா்கள் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் நிா்வாகிகள் முகம்மதுசலீம் (55), முகம்மதுமிராசு (62), ஜபாரூல்லாகான்(35), சா்புதீன் (60)ஆகிய நான்கு போ் மீது திருப்புல்லாணி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.