அபிராமம் அருகே கண்மாயில் மூழ்கி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே பெருங்கருனையை சோ்ந்த விவசாயி பாலமுருகன்(47). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிப்பதற்காக பாலமுருகன், அங்குள்ள கண்மாய்க்கு சென்றுள்ளாா். அங்கு குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளாா். இதையடுத்து அங்கு வந்த அபிராமம் போலீஸாா், பாலமுருகனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து பாலமுருகனின் மனைவி சுந்தரமுனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பாலமுருகன் வலிப்பு நோய் காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.