சிறுமி பலாத்கார வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை
By DIN | Published On : 01st December 2020 03:59 AM | Last Updated : 01st December 2020 03:59 AM | அ+அ அ- |

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி, ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் எம்.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (43). கூலித்தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்து கந்தசாமியைக் கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா, குற்றஞ்சாட்டப்பட்ட கந்தசாமிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...