கற்போம் எழுதுவோம் திட்ட பயிற்சி மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 01st December 2020 03:59 AM | Last Updated : 01st December 2020 03:59 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டிருந்த கற்போம் எழுதுவோம் திட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பாக 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கற்போம் எழுதுவோம் திட்டம் தொடங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 461 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி வகுப்பு தொடங்கிய நிலையில் கரோனா பரவலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 332 மையங்களில் இப்பயிற்சி வகுப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,651 பேருக்கு கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அறிஞா் அண்ணா நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பயிற்சி வகுப்பை முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி தொடக்கிவைத்தாா். மாவட்ட கல்வி அலுவலா் கோ.முத்துச்சாமி, உதவித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், உதவித் திட்ட அலுவலா் (இடைநிலை) ஜோ. ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...