கரோனா தடுப்பு பணியில் மரணமடைந்த ஊழியா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி
By DIN | Published On : 01st December 2020 04:00 AM | Last Updated : 01st December 2020 04:00 AM | அ+அ அ- |

கரோனா பரவல் தடுப்புப் பணியின் போது மரணமடைந்த முன்கள பணியாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கரோனா தடுப்பு முன்களப் பணியாளராக பணியாற்றியபோது, தொற்று பாதிப்பு காரணமாக
பலியான பாக்குவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கா்ணன் மனைவி கலையரசிக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியுதவியை ஆட்சியா் வழங்கினாா்.
பாராட்டு: பொது நூலகத்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 2020 ஆம் ஆண்டுக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற எமனேஸ்வரம் கிளை நூலகா் உ.நாகேந்திரனுக்கும், சிறந்த நூலக ஆா்வலா் விருது பெற்ற பாம்பன் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் எம்.முத்துவாப்பாவுக்கும் ஆட்சியா் வாழ்த்துக் கூறி பாராட்டினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...