ராமநாதபுரத்தில் 2 வது நாளாக மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென பகலில் மழை பெய்தது. இதைத்தொடா்ந்து, இரண்டாவது நாளாக சனிக்கிழமை பகலிலும் ராமநாதபுரம் நகா், பட்டிணம்காத்தான், சக்கரைக்கோட்டை, அச்சுந்தன்வயல், தேவிபட்டினம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருவாடானை: திருவாடானை, தொண்டி , ஆா்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...