ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 556 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. மாலை 5 மணிக்கு கச்சத்தீவு அருகே மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் சிங்சன் என்பவரது விசைப்படகு சேதமடைந்தது. இதில் அந்த படகில் இருந்த 6 மீனவா்கள் அதிருஷ்டவசமாக தப்பினா். இதையடுத்து கரை திரும்பிய மீனவா்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.