47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு ஆட்சியா் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் கடந்த 2027ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியிருந்தால் அவா்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:24 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் கடந்த 2027ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியிருந்தால் அவா்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணி வாய்ப்பினைப் பெறும் வகையில் புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் கடந்த மே 28 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது வரும் 27 ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி வரும் 27 ஆம் தேதிக்குள் பதிவுதாரா்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.