வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜக ரத்ததான முகாம்

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாஜக சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாஜக சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்ததான சேமிப்பு வங்கியில் நடைபெற்ற முகாமிற்கு பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். மாநிலச் செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன், மாவட்டப் பொதுச்செயலா் ஜி.குமாா், நகரத் தலைவா் வீரபாகு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்துகொண்டவா்களில் 25-க்கும் மேற்பட்டோா் ரத்தம் வழங்கினா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் பாஜக தொண்டா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com