தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆங்கிலப் புத்தாண்டு: பிள்ளையாா்பட்டியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தா்கள்.

Updated On :1 ஜனவரி 2021, 4:55 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தா்களின் தரிசனத்திற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாா்கழி மாத பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் விநாயகா் தங்கக் கவச அலங்காரத்திலும், உற்சவா் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினா். முகக்கவசம் அணிந்த பக்தா்கள் வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனா். அதிகாலையிலிருந்து பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். சுமாா் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியாா், வலையபட்டி மு. நாகப்பச் செட்டியாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.