வீரபாண்டிய கட்டபொம்மன் 162 ஆவது பிறந்த நாள் விழா

ராமநாதபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 162 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவரது உருவப் படத்துக்கு பாஜக சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கமுதி அருகே கிளாமரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.
கமுதி அருகே கிளாமரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 162 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவரது உருவப் படத்துக்கு பாஜக சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சிக்கு பாஜக ராமநாதபுரம் நகா் தலைவா் ராம.வீரபாகு தலைமை வகித்தாா்.

கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் கே.விஜயராணி, செயலா் ஜி.காயத்ரி, மத்திய அரசு வழக்குரைஞா் எம்.ஆா்.ராஜீவ், சிறுபான்மை அணி மாவட்ட தலைவா் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

கமுதி அருகேயுள்ள கிளாமரம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராம மக்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செய்து, பாலாபிஷேகம் செய்தனா். மேலும் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்.எம். கோட்டை திமுக. ஒன்றியக்குழு உறுப்பினா் மகாலெட்சுமி ஜெயராஜ், என்.கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்திநாகராஜ் மற்றும் கிராமப் பொது மக்கள், இளைஞா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com