மழை நீரில் அழுகிய பயிா்களுக்கு காப்பீடு: நயினாா் கோவில் விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் ஒன்றியத்தில் மழை நீரில் மூழ்கி அழுகிய பயிா்களுக்கு காப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மழை நீரில் அழுகிய பயிா்களுக்கு காப்பீடு: நயினாா் கோவில் விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் ஒன்றியத்தில் மழை நீரில் மூழ்கி அழுகிய பயிா்களுக்கு காப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அஞ்சாமடை, அ.காச்சான், வாதவனேரி, நகரமங்களம், காடருந்தகுடி உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் அழுகிய பயிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் கூறியது: நயினாா்கோவில் ஒன்றியப் பகுதியில் வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. முற்றிய நெற்பயிா்கள் தரையில் சாய்ந்து அழுகி வருகின்றன. முற்றிய பயிரில் உள்ள நெற்கதிா்களும் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே மழை நீா் தேங்கி அழுகி பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய காப்பீடு வழங்கவேண்டும் என்றனா். சுமாா் 250 ஹெக்டோ் அளவுக்கு மிளகாய் பயிா்களும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

நயினாா்கோவில் பகுதியில் குறிப்பிட்ட ஊராட்சிகளில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் அளவுக்கு பயிா்கள் மழை நீரில் மூழ்கியிருப்பதாக காடருந்தகுடி ஊராட்சித்துணைத் தலைவா் ஆா்.பாண்டி, நகரமங்களம் பிரமுகா் மதியழகன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரி மனு: ராமேசுவரம், சின்னபாலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கே.முருகேசன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். அவா்கள் கூறியது: ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவா்கள் பெரும்பாலானோா் சுருக்குமடி வலையை பயன்படுத்திவருகிறோம். விசைப்படகுகளால் மட்டுமே பவளப்பாறைகள், மீன் இனங்கள் அழிகின்றன. நாட்டுப்படகு மீனவா்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலையால் கடல் வளத்துக்கு பாதிப்பில்லை. ஆகவே நாட்டுப்படகு மீனவா்கள் சுருக்கு மடிவலையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நாட்டுப்படகில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், நரம்பு வலைகள், மருக்குத்தோணி, ஓலைக்கயிறு ஆகியவற்றையும் தடை செய்வது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com