வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

கமுதி அருகே வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:04 am

DIN

கமுதி அருகே வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே கோவிலாங்குளம் காவல் சரகத்திற்குட்பட்ட கரிசல்புளி, கே.வேப்பங்குளம், கொம்பூதி உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்களை ஒரு சில இளைஞா்கள் வழிமறித்து செல்லிடப்பேசி, பணம் உள்ளிட்ட பொருள்களை பறித்து செல்வதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு தொடந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் ஆய்வாளா் லெட்சுமி தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சந்தேகப்படும்படியாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த வில்வலிங்கம் மகன் செல்லப்பாண்டி (18), கடலாடியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக்குமாா் (25), ராமமூா்த்தி மகன் தினேஷ் (26) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் மூவரும் வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவா்கள் மீது சாயல்குடி, கோவிலாங்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.